இந்தியாவில் அதி தீவிரமடையும் கொரோனா பாதிப்பு : இன்று புதிதாக 2,34,692 பேருக்கு தொற்று..

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து பரவி வருகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தொற்று அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக,முழு பொதுமுடக்கம்,இரவு நேர பொதுமுடக்கத்துடன் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.05 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆகும் .கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,23,354 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 16,79,740 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கொரோனாவின் புதிய பரிணாமத்தின் அறிகுறிகள்?

Sat Apr 17 , 2021
இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாவது அலை அதி வேகத்தில் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையில் பல அறிகுறிகளுக்கு ஆளாகிறார்கள்.அவை உடல் பலவீனம், மூளை மூடுபனி, தலைச்சுற்றல், நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், மூட்டு வலி, மார்பு இறுக்கம் மற்றும் பல உள்ளிட்ட நீண்டகால அறிகுறிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரவிய கொரோனாவின் […]
corono-virus-symptoms-corona-tongue
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய