ஊசியில்லா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகம் : மத்திய அரசு..

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக ஊசியில்லா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், 3-வது தடுப்பூசியாக ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊசியில்லா தடுப்பு மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட அறிக்கையில்,

கொரோனாவுக்கு எதிராக ஜைடஸ் கேடிலா நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கியுள்ள ஊசியில்லாத கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி விலை குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த தடுப்பூசியை 3 டோஸ் போட வேண்டும். ஊசியின்றி ( மேல் தோலில் அழுத்தம் மூலம் ஊசியின்றி தடுப்பூசி செலுத்த முடியும்) செலுத்தக்கூடியது. தற்போதைய தடுப்பூசி விலையில் இருந்து இதன் விலை வேறுபட்டதாக இருக்கும். தடுப்பூசி திட்டத்தில் இந்த தடுப்பூசி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு..

Fri Oct 1 , 2021
தமிழகத்தில் 10-ஆம்வகுப்பு மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக்டோபர் 4-ம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
10th-mark-sheet-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய