இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா : ஒரே நாளில் 1,26,789 பேருக்கு கொரோனா பாதிப்பு..

corona-virus-test-in-india

இந்தியா முழுவதும் அதிவேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,28,574 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 685 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,18,51,393 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,862 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 9,10,359 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல் - தமிழக அரசு அறிவிப்பு

Thu Apr 8 , 2021
இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கானது அமல் படுத்தப்பட்டு வருகிறது.கொரானாவின் பரவல் தமிழகத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக […]
lockdown-in-tamilnadu-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய