
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.53 கோடியைத் தாண்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,63 ,695 ஆக அதிகரித்துள்ளது
ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,48,159 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,920 ஆகும் .நாடு முழுவதும் இதுவரை 13,54,78,420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.