இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா : இன்று புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,46,081 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,51,468 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,967 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 3,34,646 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 4,50,65,998 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கல்வி தொலைக்காட்சியில் பாடம் : பள்ளி கல்வித் துறை அறிவிப்பு..

Mon Mar 22 , 2021
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ,கல்வி ‘டிவி’யில், பாட வகுப்புகளை அதிகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.பின்னர் பத்து மாதங்கள் கழித்து கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது.இதனைத் தொடர்ந்து பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டன.இதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 12 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.மேலும் மற்ற வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் […]
Govt-education-tv-for-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய