விண்வெளியில் முதன் முதலில் நடந்த சீன வீராங்கனை..

முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் தற்போது முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விண்வெளி நிலையத்தை சீனா தனியாக டியான்காங் என்ற பெயரில் அமைத்து வருகிறது.இந்த விண்வெளி நிலையத்தில் சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.

வாங் யாபிங் சீன விமானப்படை வீராங்கனையாக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 41 வயதான நிலையில் அவர் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

Next Post

மாணவிகளை ஆசிரியைகளாக மாற்றும் தன்னெழுச்சி பயிற்சி..

Mon Nov 8 , 2021
மாணவிகளே தன்னெழுச்சியாக கற்பித்தல் பயிற்சிபெற்று, ஆசிரியைகளுக்கு இணையாகப் பாடமெடுக்கும் திட்டம், மதுரை புதூர் லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பறையில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் போல மாணவர்களே பிற மாணவர்களுக்கு பாடமெடுக்கும் முன்மாதிரி பயிற்சித் திட்டமானது தற்போது தொடங்கப்பட்டுள்ளது.இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவிகள் 12 பேர் கொண்ட குழுவுக்கு இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியானது ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் […]
student-act-in-Teacher-scheme
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய