உலக அளவில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தப்போகும் டெல்டா வகை கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இதில் குறிப்பாக டெல்டா பிளஸ் வகை கொரோனவானது வரும் காலத்தில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் முதன் முதலில் உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா,தற்போது 124 நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.இது தவிர, கடந்த வாரத்தை விட கூடுதலாக 13 நாடுகளில் டெல்டா வகை கொரோனா தொற்றுப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு டெல்டா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனாவானது மற்ற வகைகளைக் காட்டிலும் அதி விரைவாக தாக்கக் கூடியது என்றும், அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தப் போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது உலக முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.பிரிட்டனில் முதலில் உறுதி செய்யப்பட்ட ஆல்ஃபா வகை 180 நாடுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் உறுதி செய்யப்பட்ட பீட்டா வகை 130 நாடுகளிலும், பிரேசிலில் உறுதி செய்யப்பட்ட காமா வகை 78 நாடுகளிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பானது தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.இதில் டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.இதனால் மக்கள் அனைவ்ரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் ,கட்டுப்பாடுகளையும் அலட்சியப்படுத்தாமல் முறையாக கடைபிடித்தால் மட்டுமே எதிர்காலத்தில் வரும் பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Next Post

அழகப்பா பல்கலைகழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை மாணவர் சேர்க்கை..

Thu Jul 22 , 2021
தமிழகம் முழுவதும் தற்போது ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க அரசு அறிவித்துள்ளது.அனால் இதற்கு முன்னதாகவே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டும் ,மேலும் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்படும் உள்ளது.இதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றனர். […]
alagappa-university-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய