
நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஆனது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் ஆனது அதிக தீவிரத் தன்மை கொண்டதாகவும்,எளிதில் பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.
நாடு முழுவதும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இதுவரை 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 45,000 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 52 பேர் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் – 20 பேர்
தமிழகம் – 9 பேர்
மத்தியப் பிரதேசம் – 7 பேர்,
கேரளம் -3 பேர்
பஞ்சாப் – 2 பேர்
குஜராத்தில் -2 பேர்
ஜம்மு-காஷ்மீர் ,கர்நாடகம், ராஜஸ்தான்,ஒடிசா, ஆந்திரம் – தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.