
கொரோனா வைரஸ் தொற்றானது, சாதாரண ஜலதோஷ வைரஸ் போல மாறிவிடும். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என்று இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.
மேலும் இவர் கூறுகையில் ,கொரோனா வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. இன்னும் அது பெருந்தொற்றாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் இந்த வைரசால் வாரத்துக்கு 53 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். ஐரோப்பாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.