
மத்திய அரசின் தேசிய பேரிடர் நிர்வாக கழகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவின் 3-வது அலை தவிர்க்க முடியாதது. அதற்கு ஏற்ப மத்திய அரசும், மாநில அரசும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ள தகவலில், “3-வது அலை பெரியவர்களை பாதிப்பது போல சிறியவர்களையும் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வசதிகளை இப்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்றும் கூறி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வருகிற அக்டோபர் மாதம் உச்சத்தை அடையாளம் .இது பெரும்பாலும் குழந்தைகளையே அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்படும்போது தேவையான மருத்துவர்கள், ஊழியர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை தேவைப்படும் அளவுக்கு நாட்டில் இருப்பு இல்லை. எனவே குழந்தைகளுக்கான சுகாதாரத் தேவையை அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.