நம் அனைவரும் பொதுவாக இயற்கைமுறையில் சிகிச்சை அல்லது வைத்தியம் மேற்கொள்வதை படிப்படியாக தவிர்த்து வருகிறோம் .விஞ்ஞான வளர்ச்சியினாலும் ,நாகரிக வளர்ச்சியினாலும் நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம் .இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தாமல் ,செயற்கை முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் .இதில் செயற்கை முறையில் கலப்படம் மிகுந்த ,அதிக நறுமண ஊட்டிகள் நிறைந்த உணவையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர் .இவை அனைத்தும் நம் உடலுக்கு தீங்கு தரக்கூடியது .
இன்றைய காலக்கட்டத்தில் சிறு உடல் பிரச்சனைக்கும் மருத்துவமனையை அணுகாமல் ,மருந்துகளை உட்கொள்ளாமல் ,இயற்கை முறையில் சில அருமருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வதை வருங்காலங்களில் கடைபிடித்தால் நன்மையே உண்டாகும் .தற்போது அனைத்து விதமான காய்ச்சலுக்கும் உகந்த அருமருந்தாக தண்ணீர்விட்டான் கிழங்கு திப்பிலி சூரணம் செய்வது மற்றும் அதன் பயன்களை பற்றி இப்பதிவில் விரிவாக காணலாம் ..
செய்முறை மற்றும் பயன்கள் :
தேவையான பொருட்கள் :
தண்ணீர்விட்டான் கிழங்கு -50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
நம் முதலில் தண்ணீர்விட்டான் கிழங்கு ,திப்பிலி மற்றும் மிளகு ஆகியவற்றை எடுத்து நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும் .பின்னர் சுக்கை மேல்தோல் சீவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும் .பின்பு சுத்தப்படுத்திய தண்ணீர்விட்டான் கிழங்கு,திப்பிலி ,மிளகு கலவை மற்றும் சுக்கு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளவும் .இந்த பொடி செய்து வைத்த சூரணத்தை நம் அனைத்து விதமான காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாம் .
தண்ணீர்விட்டான் கிழங்கு சூரணத்தை காய்ச்சலினால் அவதிப்படுவோர் ,தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் தேனில் 2கிராம் அளவு சூரணத்தை கலந்து குழைத்து சாப்பிட விரைவில் காய்ச்சல் நின்று நல்ல பலன் கிடைக்கும் .