
ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுசூழல், வாழ்க்கை முறை, பொருளாதார சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு இந்த விருதுக்கு மாநகராட்சி, நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இந்த வகையில், நடப்பாண்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கான ரூ.25 லட்சம் மற்றும் விருதை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
மேலும், சிறந்த நகராட்சியாக முதல் பரிசுக்கு உதகை, இரண்டாம் பரிசுக்கு திருச்சங்கோடு மற்றும் மூன்றாம் பரிசுக்கு சின்னமானுர் தேர்வாகியுள்ளன.
சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசுக்கு திருச்சியின் கல்லக்குடி, இரண்டாம் பரிசுக்கு கடலூரின் மேல்பாட்டம்பாக்கம், மூன்றாம் பரிசுக்கு சிவகங்கையின் கோட்டையூர் தேர்வாகியுள்ளன.