9,10,11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு – தமிழக அரசு உத்தரவு ..

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலானது அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக வரும் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் விடப்பட்டன.

தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்றதுடன், மாணவ,மாணவிகளின் நலனையும் கருத்தில் கொண்டு மார்ச் 22 முதல் 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு காரணமாக பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும், அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா : இன்று புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Mon Mar 22 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,46,081 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா […]
corona-virus-spread-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய