சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார் தமிழக வீரர் நடராஜன்

தமிழக வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களமிறங்கி தனது பந்து வீச்சின் மூலம் முதல் விக்கெட்டை வீழ்த்தி தடம் பதித்தார் .

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது அதில் நடராஜன் பெயர் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 என எந்த அணியிலும் அவர் விளையாடாமல் , கூடுதல் பந்து வீச்சாளராகவே மட்டுமே அவரது பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கான்பெர்ராவில் நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில்,இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் நடராஜன் இன்று களமிறக்கப்பட்டார்.இவர் தனது யார்க்கர் பந்துவீச்சு மூலம் பெரிதும் கவனம் பெற்றதுடன் பாராட்டையும் பெற்றார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் தங்கராசு நடராஜன் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று களமிறங்கி தனது வேகப்பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய வீரரான மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்தினார் ,இதுவே இவரின் சர்வதேச போட்டியின் முதல் விக்கெட் ஆகும் .

அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகினார். இதன் காரணமாக நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது ..

Next Post

கனரா வங்கியில் 220 காலிப்பணியிடங்கள் : Canara Bank Recruitment -2020

Wed Dec 2 , 2020
கனரா வங்கியில் ஸ்பெசியலிஸ்ட்(specialist) அதிகாரி பணிக்கான காலியிடங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது .காலியாக உள்ள 220 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ,தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . விளம்பர எண் : CB /RB /2 /2020 பணி: Specialist Officers பணி மற்றும் காலியிடங்களுக்கான விவரங்கள்: 1.Backup Administrator JMGS-|2.Extract,Transform & Load (ETL) specialist – 053.BI specialist JMGS-| – 054.Antivirus Administrator JMGS-|-055.Network Administrator JMGS-|-106.Database […]
canara-bank-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய