தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்து வந்த பாதை : ஓர் கண்ணோட்டம் !!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்த்தவர் நடராஜன் .இவரது தந்தை நெசவுத்தொழிலாளி,தாயார் சாலையோரத்தில் உணவு கடை நடத்திவருபவர்.சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீதான ஆர்வமானது நடராஜனை தொற்றிக்கொண்டது .எளிமையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு தான் படிக்கும் புத்தகங்களை வாங்கும் அளவிற்கு கூட பணம் இல்லாத சூழ்நிலையில் இருந்தவர் .அவ்வப்போது கிடைக்கும் சில பணத்தை சேர்த்து வைத்து தம் விளையாட்டிற்கு பயன்படுத்திக்கொண்டார் .

நடராஜனின் கிரிக்கெட் பயணம் :

நடராஜன் தனது கிரிக்கெட் பயணத்தை இருபது வயதில் முதல் முறையாக தம் கிரிக்கெட் பயிற்சியை துவங்கினார். அந்நிலையில் அவரது உடன்பிறவா அண்ணன் ஜெயப்ரகாஷின் தூண்டுதலும் அவரின் மூலம் சென்னையில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பும் நடராஜனுக்கு கிடைத்தது .அந்த வாய்ப்பு அவருக்கு பெரும் உறுதுணையாக இருந்தது ,மேலும் அடுத்தடுத்து விளையாட வாய்ப்புகள் வந்தன.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே அப்போது அவருடைய லட்சியமாக இருந்தது அதற்கான வாய்ப்பு 2014 ஆண்டு கிடைத்தது .ஆனால் அப்போது அவரின் பந்துவீச்சில் சில சர்ச்சைகள் எழுந்தது ,அதனால் அவரால் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தப்போட்டியிலும் கலந்துகொள்ளமுடியாமல் போனது .பிறகு பல முயற்சிகளையும் ,பயிற்சிகளையும் மேற்கொண்டு அவரது திறமையை வெளிக்காட்டினார் .தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிஅவரது முழுத்திறனையும் வெளிக்கொணர்ந்தார் .

2017ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் தேர்வானார் .பின்னர் அடுத்தடுத்து வருடத்தில் தேர்வாகியும் ,2 வருடத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை .நடப்பாண்டில் நடைபெற்ற IPL போட்டியில் பங்கேற்று தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதாக தொலைக்காட்சி ஒன்றில் பிரத்யேகமாக பேட்டி ஒன்றை அளித்தார் .

ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யார்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, தோனி மற்றும் ஏ பி டி வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை ஆட்டமிழக்க செய்ததால் சர்வதேச அளவிலும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நடராஜனின் வெற்றிப் பயணம் :

நவம்பர் 27ம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் டி20க்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ திங்கட்கிழமை அறிவித்தது. இதனால், மகிழ்ச்சியில், தான் இருப்பதாக தெரிவித்தார் .

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. அதை அடைவதற்காகத் தான் முயற்சி செய்து வந்தேன். என்றாவது ஒருநாள் இந்திய அணியில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இவ்வளவு சீக்கிரமாக அந்த வாய்ப்பு கிடைக்கும் என சற்றும் எதிர் பார்க்கவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். என்னைப் போன்று கிராமத்திலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், கடுமையான பயிற்சி தான் எனக்கு இந்த நல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தங்கராசு நடராஜன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வெற்றிப்பயணமானது மேலும் தொடரவும்,பல வெற்றிகளையும்,சாதனைகளையும் பெற Aptinfo சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 20 -11 -2020

Fri Nov 20 , 2020
மேஷம் இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் .உங்களின் முயற்ச்சிக்கு உங்கள் துணைவி உறுதுணையாக இருப்பார்கள் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே இன்று சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் .மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் […]
indraya-raasi-palangal-20-11-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய