தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .

காலிப்பணியிடங்களுக்கான விவரம் :
பணி : பதிவுரு எழுத்தர் – 37 காலிப்பணியிடங்கள்
ஊதியம் : ரூ.15,900 – 50,400
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
பணி : ஓட்டுநர் – 32 காலிப்பணியிடங்கள்
ஊதியம் : ரூ.19,500 – 62,000
தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் பணியிடங்களுக்கான தகுதியில் ,ஓட்டுநர் 2 ஆண்டு ஓட்டுநர் பணியில் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் அதோடு ஓட்டுநர் தொழில்நுட்பத்தில் கையாளும் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை:
இக்காலிப்பாணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
வயது வரம்பு :
01.07.2020 தேதியின்படி பொதுப்பிரிவினர் (ஓபிசி) 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற பிரிவினர் 32 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும். (ஆதிதிராவிடர் ,பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ...)
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30 -09-௨௦௨௦
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வமான இணையதளத்தில் சென்று விவரங்களை பெற்று கொள்ளலாம் . https://tncwwb.onlineregistrationform.org