
தமிழகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார் .தமிழகம் முழுவதும் சுமார் 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியிருந்தார் .இதன் முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை இன்று முதல்வர் திறந்து வைத்தார் .
காய்ச்சல் ,சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் மினி கிளினிக்குகள் அமைப்பட்டுள்ளன .இந்த கிளினிக்கில் ரத்த அழுத்தம் ,மகப்பேறு,ஹீமோகுளோபின் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை போன்றவற்றை செய்யலாம் .
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட உள்ள 2000 அம்மா மினி கிளினிக்குகளில் ,கிராமப்புறங்களில் 1400 ,நகர்ப்புறங்களில் 200 ,சென்னையில் 200 மற்றும் நகரும் கிளினிக்குகள் 200 அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதல்வர் பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார் .முதல்வருடன் ,துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் ,அமைச்சர்கள் விஜய பாஸ்கர் ,ஜெயக்குமார் ,வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர் .
இந்த மினி கிளினிக்கில் மருத்துவர் ,செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பார்.கிளினிக் ஆனது காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் ,மாலை 4 மணி முத்த இரவு 8 மணி வரை என மொத்தம் 8 மணி நேரம் இந்த க்ளினிக் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .