
தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” ஐ தமிழக முதல்வர் இன்று வெளியிட்டார்.
தமிழ்நாடு குழந்தைகளுக்கான கொள்கையின் முக்கிய நோக்கமானது, தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெறவும், குழந்தைகளின் உரிமைகள் எவ்வித தடையுமின்றி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும் அமைக்கப்பட்டதாகும்.
மேலும் இந்த கொள்கையானது குழந்தைகளின் கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு ,குழந்தைகளின் ஊட்டச்சத்து இவை அனைத்திற்குமான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.