
சென்னை உயர்நீதிமன்றமானது வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை முடிக்க கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது .
மாவட்டப் பதிவாளர் சேகரை தனி அதிகாரியாக நியமித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலை நிர்வகிக்கும் பொறுப்பை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .தாயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால் , இந்த நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார் .தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் இதே போன்று ஓய்வுபெற்ற நீதிபதியை வைத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என வழக்கு ஒன்றை தொடுத்தார் .
இந்நிலையில் உயர்நீதி மன்றம் ,ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்து ,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலை கடந்த ஜூன் 30 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டது .மேலும் கொரோன தொற்றின் காரணமாக தேர்தல் காலக்கெடுவை நீட்டித்து செப்டம்பர் -30 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு கேட்டுக்கொண்டது .தற்போது, தேர்தல் ஆனது திட்டமிட்டபடி முடிக்க படாததால் ,விரைவில் முடிக்க கால அவகாசம் கேட்டு ராதாகிருஷ்ணன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த மனுவானது நீதிபதி பி.டி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டார் .ஒய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சிறப்பு அதிகாரியாக நியமித்து மற்றும் தேர்தலை நடத்தி முடித்து அதுதொடர்பான அறிக்கையை வரும் ஜனவரி 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.