
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படமானது வெளியாவதில் இழுபறியானது இருந்து வந்தது .இத்திரைப்படமானது விமானப்படை போக்குவரத்து சம்பந்தமான திரைப்படம் என்பதால் இந்திய விமானப்படையிடமிருந்து அனுமதியானது பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் இத்திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது .
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படமானது ,ஏற்கனவே அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் ,பல சிக்கல்கள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது . தற்போது சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட நிலையில் ,இத்திரைப்படமானது தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரெய்லர் ஆனது அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகும் என வீடியோ பதிவின் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.