சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த : தீபாவளி ஸ்பெஷல் – படக்குழு அறிவிப்பு …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ,இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த .இப்படமானது வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தற்போது தயாரித்து வரும் படம் அண்ணாத்த ஆகும் .இப்படமானது கொரோன தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது .இந்நிலையில் மீண்டும் ,கடந்த டிசம்பர் மாதம் கொரோன விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது .பின்னர் அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது என சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி தெரிவித்தது .இதனிடையில் ரஜினியின் உடல் நலம் சற்று பாதிப்புக்குள்ளாததாக இருந்த நிலையில் ,அதனையும் கருத்தில் கொண்டு படப்பிடிப்பு ஆனது சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழுவின் சில தகவல்கள் வெளியாகின.

இறுதியாக ,ரஜினிகாந்தின் அண்ணாத்த படமானது நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது .ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ,ஆவலையும் தூண்டியுள்ள அண்ணாத்த படமானது தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Next Post

எஸ்.எஸ் .ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் : அக்டோபர் 13 -ல் உலகமெங்கும் ...

Tue Jan 26 , 2021
பிரம்மாண்ட இயக்குனரான எஸ்.எஸ் .ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமானது வருகிற அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஆர்ஆர்ஆர் படமானது இரு சுதந்திரப்போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜு ,கொமரம் பீம் என்ற இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான கதையாகும் . இப்படம் 1920 காலகட்ட படமாகும் .இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்துள்ளனர் .இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவு கே […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய