பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு 20-ந் தேதி தொடக்கம்..

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் துணை கலந்தாய்வு வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை (சனிக்கிழமை) வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு, சான்றிதழ் பதிவேற்றம் நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது.

பொறியியல் கலந்தாய்வில் முதலில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடந்தது.இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 324 பேர் சேர்ந்தனர். இதுதவிர சிறப்பு பிரிவில் உள்ள மற்றப்பிரிவினர் 473 இடங்களை தேர்வு செய்தனர். அந்தவகையில் சிறப்பு பிரிவு மூலம் 7 ஆயிரத்து 797 இடங்கள் நிரம்பின.

பொறியியல் கலந்தாய்வில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படும் என்று கலந்தாய்வை நடத்தும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் அறிவித்து இருந்தது. அதன்படி, 4 சுற்று கலந்தாய்வும் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது.

Next Post

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,596 பேருக்கு கொரோனா தொற்று..

Mon Oct 18 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 13,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 230 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும். இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,81,315 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 7,555, மகாராஷ்டிராவில் 1,715, தமிழ்நாட்டில் 1,218 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் […]
new-corona-cases-updated-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய