
கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடியாக தடுப்பூசி போடும் திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று நந்தனம் கலைக் கல்லூரியில் திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி திறக்கப்படுவதால், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கல்லூரிகளிலும் தடுப்பூசி போடும் முகாம் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. 2 வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான அனைத்து மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டால் தான் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளி உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.