
தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவா்களை சோ்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுவதால், மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில், மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயா்த்தவும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளை அதிகரிக்கவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் நேரடி வகுப்புகளுக்காக, விரைவில் நா்சரி பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.