நாகை காயாரோகணேசுவரர் திருக்கோவில் : சனி,ராகு மற்றும் சர்வதோஷ நிவர்த்திக்கு ….

நாகபட்டினத்திலுள்ள ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் உடனுறை அருள்மிகு காயாரோகணஸ்வாமி திருக்கோவில் பல ஆன்மீகச் சிறப்புகளை கொண்டுள்ளது .இத்தலமானது சப்தவிடங்கர் தலம் ,பல ஊழிக்காலங்களைக் கடந்த மூர்த்தி அருளும் தலம்,தசரத சக்கரவர்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சியளிக்கும் தலம் ,நாகராஜன் பிரதிஷ்டை செய்த நாகபரண விநாயகர் அருளும் தலம் ,சக்தியின் 5 ஆட்சி பீடங்களில் ஒன்றான தலம் என பல சிறப்புகளை கொண்டுள்ளது .

காயாரோகணேசுவரர் திருப்பெயர் வரக்காரணம் :

இத்தலத்தில் புண்டரீக முனிவர் முக்தி வேண்டி கடும் தவம் புரிந்த நிலையில் அவருக்கு இறைவன் சிவபெருமான் காட்சியளித்தார் .முனிவரை சிவபெருமான் ஆரோகணம் செய்து உடலுடன் (காயம்) ஏற்றதால் ,இத்தலத்தின் இறைவனுக்கு காயாரோகணேசுவரர் என்ற திருப்பெயர் விளங்கியது .பின்னர் பல ஊழிக் காலங்களை கடந்த மூர்த்தி என்ற அடிப்படையில் ஆதிபுராணர் என்ற திருப்பெயரும் விளங்கியது .

இத்தலமானது சக்தியின் 5 ஆட்சிப் பீடங்களில் ஒன்றாகவும் ,64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்கும் இத்தலம் ,அம்பாளின் ருது ஸ்தலமாக குறிப்பிடப்படுகிறது .

காயாரோகணேசுவரர் தலத்தின் ஆன்மீகச் சிறப்பு :

திருமணத்துக்கு முந்தய பருவமான ,எவனோ பருவத்தில் காட்சியளிக்கும் அன்னை ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் கோவில் பணிக்காக அனுப்பட்ட நந்திபெருமான் ,இறைவனைப்பிரிய மனமில்லாமல் ,அம்பாளின் சன்னதி முன்பு தென்மேற்கு திசை நோக்கி தன் தலையை திருப்பிய நிலையில் ,ஒரு கண்ணால் இறைவனையும் ,மறுக்கண்ணால் அன்னை நீலாயதாட்சியம்மனையும் கண்ணுற்றிருக்கும் வகையில் காட்சியளிக்கும் நிகழ்வு,வேறு எந்த தளத்திலும் காண முடியாத அறிய நிகழ்வாகும்.

ரோகிணி சகடபேதம் – சனிதோஷ நிவர்த்தி :

ரோகிணி சகடபேதம்:

சனீஸ்வர பகவான் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கமாகும் .அப்போது ரோகிணி நட்சத்திரத்தில் சனீஸ்வர பகவான் சஞ்சரிக்கும்போது ,அவரின் தேர் உடையும் அளவுக்கு பாதைகள் கரடுமுரடாக இருக்கும் எனவும் ,இதனால் உலகில் மிகப் பெரிய பஞ்சம் ,அரசியல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது ஒரு சாத்திரக் கணிப்பாகும் .இந்நிகழ்வு ரோகிணி சகடபேதம் எனப்படும் .

ரோகிணி சகடபேதம் பஞ்சமானது சுமார் 12 ஆண்டுகாலம் நீடிக்கும் என கூறப்படுகிறது .தசரத சக்கரவர்த்தி தன் நாட்டு மக்களை பஞ்சத்திலிருந்து காப்பாற்ற ,சனீஸ்வர பகவானை சந்தித்து பஞ்சத்திலிருந்து நீங்க வழி ஒன்றை கோரினார் .ஆனால் சனீஸ்வர பகவான் இதற்கு உடன்படவில்லை .இதனால் தசரத சக்கரவர்த்தி சனீஸ்வர பகவானுடன் போரிட்டு பஞ்சத்திலிருந்து மக்களை காப்பாற்ற நினைத்தார் .

போருக்கு முன்பு தன் குலக் கடவுளான சூரிய பகவானை வேண்டினார் .சூரியபகவான் தசரத சக்கரவர்த்தியின் முன் தோன்றி சனீஸ்வரனுடன் போர் புரிவதை நிறுத்த வேண்டும் என வினவினார் .பின்னர் பஞ்சத்திலிருந்து நீங்க உபாயம் ஒன்றை வழங்கினார் .அவை நவகிரகங்கள் அனைத்தும் ஒரே திசையில் மகாலக்ஷ்மியை நோக்கி காட்சியளிக்கும் தலத்தில் ,மூலவர் சிவபெருமானை நோக்கிய நிலையில் சனீஸ்வர பகவான் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் ,சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருளுவார் ,இதனால் பிரச்சனைகள் தீரும் எனவும் கூறினார் .தசரத சக்கரவர்த்தி இதனை கடைபிடித்து பஞ்சத்திலிருந்து தம் மக்களை காப்பாற்றினார் .இதன்படி சனீஸ்வர பகவான் ,தான் அனுகிரக மூர்த்தியாக அருள தாமே வாக்கு கொடுத்த தலம் இத்தலம் எனப்படுகிறது.

ராகு தோஷ நிவர்த்தி :

நாகராஜன் தன்னுடைய மகளுக்கு இருந்த மிகை தனம் மறையவும் ,தனக்கு ஆண் வாரிசு கிடைக்க வேண்டி வழிபட்ட தலம் இத்தலமாகும் .இத்தலத்தில் நாகராஜன் பிரதிஷ்டை செய்த விநாயகர் ,அருள்மிகு நாகபரண விநாயகர் என்ற திருப்பெயருடன் கோவிலின் நுழைவு வாயிலில் தனி சன்னதி கொண்டு காட்சியளிப்பார் .

நாகராஜனின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் ,தனக்கான கணவரை உன் மகள் காணும்போது அவளின் மிகை தனம் மறையும் என்று அருளினார் .இதன்படி முசுகுந்த சக்கரவர்த்தியை கண்ட நாகராஜனின் மகளுக்கு மிகை தனம் மறைந்து ,இத்தலத்தில் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது .

குழைந்தை பேறு தலம் :

குழந்தைப் பேறு தலங்களில் ஒன்றாக விளங்குவது இத்தலமாகும் .சிவபெருமானால் தகனம் செய்யப்பட்ட மன்மதன் மீண்டு வர விஷ்ணு வழிபட்ட தலமாகவும் ,நாகராஜன் புத்திர பாக்கியம் அருளிய தலமாகவும் இத்தலம் விளங்குகிறது .

Next Post

தனிப்பெருங் கருணை அருட்பெரும்ஜோதி : வடலூர் வள்ளலார் தெய்வ ஜோதி தரிசனம் ...

Fri Jan 29 , 2021
தைப்பூச திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ,வடலூரில் அமைந்துள்ள திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஜோதி தரிசன வழிபாடு வெகு விமர்சையாக நேற்று (வியாழக்கிழமை )நடைபெற்றது . வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும் .இதில் தை மாதத்தில் வரும் ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் .இதன்படி ,வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 150 -வது ஆண்டு தைப்பூச ஜோதி பெருவிழாவானது […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய