மாணவிகளை ஆசிரியைகளாக மாற்றும் தன்னெழுச்சி பயிற்சி..

மாணவிகளே தன்னெழுச்சியாக கற்பித்தல் பயிற்சிபெற்று, ஆசிரியைகளுக்கு இணையாகப் பாடமெடுக்கும் திட்டம், மதுரை புதூர் லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வகுப்பறையில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் போல மாணவர்களே பிற மாணவர்களுக்கு பாடமெடுக்கும் முன்மாதிரி பயிற்சித் திட்டமானது தற்போது தொடங்கப்பட்டுள்ளது.இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவிகள் 12 பேர் கொண்ட குழுவுக்கு இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியானது ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் அகஸ்திய பாரதி வழிகாட்டுதலுடன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சகாயமேரி மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம் ஆசிரியர்களை போன்று பாடக் குறிப்பு எடுத்தல், ஒரு பொருளின் அனைத்து தகவல்களையும் திரட்டுதல், அதற்கான உதாரணங்களை மாதிரி படமாக காட்டி விளக்குதல் என ஆசிரியர்களே வியக்கும் வகையில் இம்மாணவியர் பாடம் எடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பத்ம விருதுகள் 2021..

Mon Nov 8 , 2021
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2021ஆம் ஆண்டு அறிவித்த பத்ம விருதுகளின்படி, ஜப்பான் பிரதமர் […]
padma-awards-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய