வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க சிறப்பு சலுகை – தமிழக அரசு அறிவிப்பு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெரும் வகையில் “சிறப்பு சலுகை” தமிழக அரசால் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில்,பார்வை 1 ல் 2011 , 2012 , 2013 , 2014 , 2015 மற்றும் 2016 – ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பார்வை 2 ல் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் , வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை , 2017 , 2018 மற்றும் 2019 – ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017 , 2018 மற்றும் 2019 – ஆம் ஆண்டுகளில் ( 01.01.2017 முதல் 31.12.2019 வரை ) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு , சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி அரசு ஆணையிடுகிறது :

( ii ) இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும் .

( iii ) மூன்று மாதங்களுக்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

( iv ) 1.1.2017 – க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இச்சலுகையைப் பெற விரும்பும் நபர்கள் , அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு ..

Sat May 29 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த […]
covid-test-taken-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய