52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்..

உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 260 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பி வருகிறது.இதுவரை பல கட்டங்களாக 1500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று பால்கான்-9 ராக்கெட் மூலம் 52 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து விண்ணுக்கு செலுத்தியது.இந்த அணைத்து செயற்கைக்கோள்களும், முன்பு அனுப்பப்பட்ட செயற்ககைக்கோளுடன் இணைத்து செயல்பட உள்ளது .

இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்களை தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயம் : ‘இ-பதிவு' முறையை பதிவு செய்வது எப்படி ?

Mon May 17 , 2021
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் ,வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.நகரங்களைத் தொடர்ந்து தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது. ‘இ-பதிவு’ முறையை பதிவு […]
E-pass-registration

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய