இந்தியாவில் சற்று உயர்ந்த கொரோனா தொற்று – ஒரே நாளில் 67,208 பேருக்கு தொற்று உறுதி ..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 67,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,97,00,313 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2,330 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,84,91,670 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,81,903 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 1,03,570 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,26,740 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 26,55,19,251 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு..

Thu Jun 17 , 2021
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர் .கொரோனா தொற்றால் தொடர்ந்து குழந்தைகள் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாக சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஒரு சில வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு தரக்கூடிய ஐவர்மெக்டின், ஹைட்ராக்சிகுளோரோகுயின், பேவிபிராவிர், டாக்சிசைக்ளின் […]
corona-affected-in-child
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய