கொரோனா நோயாளிகளை தாக்கும் தோல் பூஞ்சை நோய்..

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பெரும்பாதிப்பை ஏற்படுத்திய நிலையில்,கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்புப் பூஞ்சை (மியூகோா்மைகோசிஸ்) நோயால் பாதிக்கப்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் பூஞ்சை நோய் தொற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தோல் பூஞ்சை நோய் கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தற்போது தொடா்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சிக்கலாபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அவருக்கு காது பகுதியில் பூஞ்சை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலருக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தோல் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறைவதற்குள் காதுக்கு வந்துள்ள பூஞ்சை நோய் பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக - கொரோனா பாதிப்பு நிலவரம் ..

Fri Jun 4 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,810, சென்னையில் 1,971 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]
distict-wise-corona-in-tamilnadu-04-06-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய