பகல்பத்து ,இராப்பத்து உற்சவம் தொடங்கியது : சிறுபுலியூர் பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறுபுலியூர் பெருமாள் கோவிலில் பகல்பத்து ,இராப்பத்து உற்சவம் ஆனது வெகு விமர்சையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட்டது .சிறுபுலியூர் பெருமாள் கோவில் ஆனது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகில் அமைந்துள்ளது .இத்தலத்தில் புகழ்ப்பெற்ற ஸ்ரீ ரங்கம் பெருமாளைப்போன்று தெற்குநோக்கிய சன்னதியானது சிறப்புற்று விளங்குகிறது .சிறுபுலியூரில் ஸ்ரீ தயா நாயகி ஸமேத ஸ்ரீ கிருபா சமுத்திர பெருமாள் கோவில் உள்ளது .

சிறுபுலியூர் பெருமாள் கோவிலின் சிறப்பு :

ஒருமுறை ஆதிசேஷனுக்கும் ,கருடனுக்கும் தீராத பகையானது நீடித்து வந்தது .கருடனுக்கு பயந்து ஆதிசேஷன் அங்கும் இங்கும் பயந்து இறுதியில் தன்னை காப்பாற்ற சிறுபுலியூரில் உள்ள பெருமாளை நோக்கி தவம் செய்தார் .இதன் விளைவாக மாசி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று ,ஸ்ரீ கிருபாசமுத்திர பெருமாள் ஆதிசேஷனுக்கு அருள் புரிந்து ,அவரை தனது சயனமாக ஏற்றுக் கொண்டார் .இந்த திருத்தலத்தில் கருடன் சன்னதியானது பூமிக்கு அடியிலும் ,ஆதிசேஷன் சன்னதியானது உயர்ந்த இடத்திலும் இருப்பது சிறப்பை தரும் .”கருடா சௌக்கியமா ” என ஆதிசேஷன் கேட்க அவரவர் இருக்க வேண்டிய இடத்தில இருந்தால் சௌக்யமே என்று கருடன் கூறிய ஸ்தலம் இத்தலமாகும் .

இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் புகழ்ப்பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல்பத்து ,இராப்பத்து உற்சவமானது நடைபெரும் .

பகல்பத்து பெருவிழா :

வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு ,இன்று (ஞாயிற்றுகிழமை) பகல்பத்து விழாவின் முதல் நாளையொட்டி ஸ்ரீ கிருபாசமுத்திர பெருமாள் ,கிருஷ்னர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இரண்டாவது நாளான திங்கட்கிழமை ஸ்ரீ கிருபாசமுத்திர பெருமாள் ஸ்ரீ ராமர் கோலத்திலும் ,மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீ காளிங்க நர்தனத்திலும் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .நான்காம் நாளான வியாழக்கிழமை காலையில் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலும்,மாலை மோகினி திருக்கோலத்தில் கோவிலின் சிறப்பு வழிபாடும் நடைபெறும் .

இராப்பத்து பெருவிழா :

பகல்பத்து பெருவிழாவின் தொடர்ச்சியாக இராப்பத்து உற்சவமானது டிச.25 ஆம் தேதி முதல் நாளாக ,கிருபாசமுத்திர பெருமாளுக்கு தங்க மூலம் பூசப்பட்ட கவசேவை நடைபெற்று ,தங்கத்தோளுக்கினியானில் எழுந்தருளி ,அதிகாலை பரமபத வாசல் திறப்பு நடைபெறும் .பின்னர் இரண்டாம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் திருக்கோலத்திலும்,மூன்றாம் நாளில் திருவேங்கமுடையான் திருக்கோலத்திலும் காட்சியளிப்பார் .

இராப்பத்து உற்சவத்தின் ஆறாம் நாளில் (டிச .30) நம்மாழ்வார் திருவடி தொழுதால் நடைபெறும் .உற்சவத்தின் இறுதி நாளான ஏழாம் நாள் இரவு இயற்பா சாற்று முறை நடைபெறும் .

Next Post

புதிய ரக கொரோனா வைரஸ் : உலகை அச்சுறுத்தும் கொரோனா !!

Mon Dec 21 , 2020
புதிய ரக கொரோனா வைரஸ் ஆனது சமீபத்தில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது .அதி தீவிரமாக பரவி வரும் இந்த கொடிய கொரோனா பல்வேறு தகவமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிகிறது . முந்தைய கொரோனா வைரஸ் -ன் தாக்கத்தை விட தற்போது பரவி வரும் புதிய ரக கொரோனா வைரஸ் 70 சதவிகிதம் அதிக பரவும் தன்மையை கொண்டுள்ளது . சமீபத்தில் பிரிட்டனில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதை இது விளக்குகிறது .இதனை தொடர்ந்து […]
new-korona-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய