
சிம்புவின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது .சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பானது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது .
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக உள்ள மாநாடு படத்தில் நடிகர் சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .இப்படத்தில் பாரதிராஜா ,கல்யாணி ப்ரியதர்ஷன் ,எஸ்.ஏ.சந்திரசேகர் ,பிரேம்ஜி ,கருணாகரன் ,மனோஜ் ,பிக் பாஸ் டேனியல் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .
இந்நிலையில் மாநாடு படத்தின் டீசர் ஆனது சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது .