
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் .ஆனால் தற்போது வாட்ஸ்ஆப் செயலியானது பல்வேறு பயன்பாட்டையும்,தனியுரிமை விதிமுறைகளையும் புதுப்பித்து வருகிறது .இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வரும் மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் ,அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளனர் .வாட்ஸ்ஆப் செயலியின் புதிய விதிமுறைகளை அங்கீகரிப்போர் மட்டுமே வாட்ஸ்ஆப் செயலியை தொடரமுடியும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது .
தற்போது பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியை தேடி வருகின்றனர் .இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் , வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்துமாறு கூறியுள்ளார் .இதனைத்தொடர்ந்து பல்வேறு சிக்னல் செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது .இந்தியா உட்பட ஜெர்மனி,பிரான்ஸ் ,ஆஸ்திரேலியா ,பின்லாந்து ,ஹொங்காங்க் போன்ற அனைத்து நாடுகளிலும் சிக்னல் செயலியின் பதிவிறக்கம் ஆனது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .
ஆப் ஸ்டோரில் இலவச ஆப்பின் பட்டியலில் வாட்ஸ்ஆப் செயலியை பின்னுக்கு தள்ளி சிக்னல் செயலி முன்னேறியது .