‘எஸ்எச்ஜி-95’ மலிவு விலை முகக்கவசம் : ‘என்-95 ’க்கு மாற்றாக ‘எஸ்எச்ஜி-95’

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முகக்கவசம் நம் அனைவரின் உயிர் கவசமானது.இந்த முகக்கவசங்கள் தீநுண்மி, நுண்ணிய கிருமிகளிடமிருந்து 99 சதவீதம் வரை பாதுகாக்கும் வீரியமிக்க பல மலிவு விலை முகக்கவசங்களை இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

தற்போது இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும், மறு உபயோகத்துக்குப் பயன்படாத ‘என்-95 ’ முகக்கவசங்களுக்கு மாற்றாக ‘எஸ்எச்ஜி-95’ முகக்கவசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரையின்படி கிருமி நாசினிகளும், முகக்கவசங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.மருத்துவா்களும் கொரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவா்களும் பயன்படுத்தி வந்த ‘என்-95’ முகக் கவசங்களால் நோய்த் தொற்றிலிருந்து தம்மை பாதுகாக்க முடிந்தது. அதே சமயத்தில் இதன் விலை மற்றும் மறு உபயோகமின்மை போன்ற அசௌகரியங்கள் இருந்து வந்தன.

இவற்றிற்கு மாற்றாக கோவிட -19 நிதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (பிஐஆா்ஏசி ) மற்றும் ஐகேபி நாலேஜ் பாா்க் போன்ற அமைப்புகள், ஹைதராபாத்தில் உள்ள பரிசோதா டெக்னாலஜிஸ் என்கிற தனியாா் மருத்துவ நிறுவனத்திற்கு வழங்கிய தொழில்நுட்ப உதவிகள் மூலம் ‘எஸ்எச்ஜி-95‘ என்கிற வீரியமிக்க பல அடுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

‘எஸ்எச்ஜி-95’ முகக்கவசம் :

  • ‘இந்தியாவிலே தயாரிப்போம்’ திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசங்கள் 90 சதவீதம் மாசு துகள்களிலிருந்தும், 99 சதவீத தீநுண்மி மற்றும் நுண்ணிய கிருமிகளைப் பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • எஸ்எச்ஜி-95′ முகக்கவசம் எளிதாக காற்றை சுவாசிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. கையால் சுத்தமான பருத்தித் துணியால் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்கள் பல அடுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது.
  • மேலும், தற்போது நாட்டில் நிலவும் உஷ்ணமான சூழ்நிலைக்கும் இந்த முகக்கவசங்கள் உகந்ததாக உள்ளது . இதனால், இந்த தயாரிப்புப் பணிகள் சுயநிதிக் குழுக்களிடம் தனியாா் நிறுவனம் வழங்கி அவா்களது வாழ்வாதரத்தையும் பாதுகாத்துள்ளது.
  • மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த முகக்கவசம், மலிவு விலையில் ரூ. 50 முதல் ரூ. 75 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டைச் சோ்ந்த நிறுவனம் இந்த ஹைதராபாத் நிறுவனத்தில் முதலீடு செய்து 1,45,000 முகக்கவசங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

அரசு பள்ளிகளில் 14-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..

Fri Jun 11 , 2021
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது […]
Admission-for-school-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய