
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஷேன் வாட்சன் தம் அனைத்துவிதமான கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் .கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சில தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பை ஷேன் வாட்சன் வெளியிட்டுள்ளார் .
ஷேன் வாட்சன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் ,தற்போது இந்நிலையில் அவர் கடந்த மூன்று வருடங்களாக என்னிடம் அன்பு காட்டிய சிஸ்கே அணியினருக்கும் ,ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் .அவரது கடைசி போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது ஆகும் .

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.இவர் சென்னை அணிக்காக கால்களில் ரத்த காயத்துடன் விளையாடியது சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றார் .
2015ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷேன் வாட்சன் அறிவித்திருந்தார் ,பின்பு 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது .