
முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதைப்போன்று, இணைப்பு கல்லூரிகளுக்கும் இதே தேதியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இளநிலை என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி வருகிற 26 ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன.கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் திறக்கப்பட பள்ளி,கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது.இந்நிலையில்,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகளை தொடர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும்,என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வருகிற 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இவற்றில்,சில பாடப்பிரிவுகளை சேர்ந்த அரியர் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.