பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்..

பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தற்போது கொரோன தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக தேர்வு மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது .

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் 13-ம் தேதி (டிசம்பர்) தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இன்டர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Mon Nov 15 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 809 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 918 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,296 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
district-wise-corona-updates-15-11-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய