
2021 -2022ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.கடந்த அக்டோபர் 17ம் தேதி வரை பொது மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் ,இரண்டாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என தனியார் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தனர்.
நடப்பு கல்வியாண்டில் நேரடி தேர்வுகள் தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், பி.ஆர்க் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் கல்லூரிகளுக்கு சென்று உங்கள் சேர்க்கையை உறுதிபடுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.