பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு..

பள்ளி மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் ஈடுபட வழிகாட்டவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக இருக்கும். ஆறாவது வருடமாக இந்தாண்டு தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளுடன் உரையாடுவதற்கும் அவர்களுடன் சில செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம்,என்சிஇஆர்டி இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இணைய வழியில் நடைபெறும். இளம் விஞ்ஞானிகளைத் தேடும் இத்தேர்வை ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மூலம் ஆன்லைனில் தங்கள் வீடுகளில் இருந்தே எழுதலாம். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தேர்வில் 6 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்குபெறலாம். 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவும் 9 முதல் 11 வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படுவர். தேர்வுக்கு முன்னர் இரண்டு மாதிரித் தேர்வுகள் நடைபெறும். மாணாக்கர்கள் வார இறுதி நாள்களில் அவற்றை எழுதிப்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

சிறுவர்களுக்கான தடுப்பூசி பிப்ரவரி மாதம் முதல் கிடைக்கும் - சீரம் நிறுவனம் தகவல்..

Fri Oct 22 , 2021
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதில் அதிகமாக 80 சதவீதம் கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும். இந்தியாவில் தற்போது 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து சீரம் […]
covid-vaccine-for-kids
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய