
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ,பின்னர் படிப்படியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைப்பெற்று வந்தது.
தற்போது,அனைத்து பள்ளிகளும் மார்ச் மாதத்துடன் மூடப்படுவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.இது முற்றிலும் தவறான தகவல் எனவும் ,ஏப்ரல் 1 முதல் வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார் .
கொரோனா பரவல் ஆனது தற்போது அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளிகளும் மார்ச் மாதத்துடன் மூடப்படும் என்ற தகவல் மாணவர்கள் மற்றும் மக்களிடையே பரவி வந்தது.இதனிடையே பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது ,இதில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறும் ,மேலும் மார்ச் மாதத்துடன் பள்ளிகள் மூடப்படும் என்ற செய்தி தவறானது என்ற விளக்கத்தையும் பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது .