தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் செப். 1 முதல் 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிக அளவில் பரவவில்லை.

இந்நிலையில் சுகாதாரத்துறை, கல்வியாளர்கள், உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்பு தற்போது, 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு கொரோனா குறித்து அறிக்கை ஒன்டாரி வெளியிட்டுள்ளது,

  • சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
  • வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
  • கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கருவி கொண்டு பரிசோதிக்க வேண்டும்
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும். சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கலை, அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்.4 முதல் நேரடி வகுப்புகள்..

Fri Oct 1 , 2021
கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நடப்பாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சமீபத்தில் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததால், 2-ம் மற்றும் […]
arts-and-college-first-year-college-open
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய