நவம்பர் 1-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும்..

நவம்பர் 1-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ள பெற்றோர்கள் அதன்படியே செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் பிரச்சினை சரி செய்ய வழி பிறக்கும். இந்த திட்டம் உன்னதமான திட்டம் ஆகும். மாலை நேர வகுப்பாக இந்த பயிற்சி நடைபெறும். இது குறித்து பயிற்சி கொடுக்க படித்த தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேற்று வரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Mon Oct 25 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 12,791 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,341- பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 14 பேர் பலியாகியுள்ளனர்.மொத்த […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய