
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நவம்பர் வரை மாணவர் சேர்க் கையை நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1 ம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை முழுமையாக திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி எல்.கே.ஜி ,யு.கே.ஜி மற்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவரக்ளுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகள் மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமலும், பாதியில் படிப்பை விட்டு தவிக்கும் மாணவர்கள் அரசு பள்ளிக்களில் சேர விரும்பினால் அவரைகளை சேர்த்து கொள்ளலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் நவம்பர் மாதம் வரைக்கும் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.