
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவான பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ட்ரெய்லர் ஆனது வெளியிடப்பட்டுள்ளது .இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இயக்குனர் ஜான்சன் உடன் கைக்கோர்க்கிறார் சந்தானம் .
பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவு – ஆர்தர் வில்சன் ஆவார் . சந்தானம் சமீபத்தில் தில்லுக்கு துட்டு ,ஏ 1 ,டகால்டி ,பிஸ்கோத் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் .சந்தானம் நடித்த ஏ 1 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜான்சன் ஆவார் ,இவரது இரண்டாவது படமானது பாரிஸ் ஜெயராஜ் ஆகும் .
தற்போது பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ,ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது .