
இந்தியாவில் புதிதாக F சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்போவதாக சாம்சங் கேலக்ஸி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .
சாம்சங் கேலக்ஸி நிறுவனம் ஆனது ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது .இந்நிறுவனம் பல வகையான ஸ்மார்ட்போன்களை விலைக்கு ஏற்றாற்போல் அறிமுகம் செய்து வருகிறது . சாமானிய மனிதர்கள் முதல் கடைக்கோடியில் வசிக்கும் மனிதர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் விலைக்கு தகுந்தாற்போல் ,பல அமசங்களை கொண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது .
தற்போது சாம்சங் கேலக்ஸி நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போன்களான F சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .