நீட் தேர்வு எழுதுவோருக்கு லிம்ரா நிறுவனம் சார்பில் மாதிரி தேர்வு ..

நாடு முழுவதும் நீட் தேர்வானது வரும் செப்டம்பர் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது.இந்நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கட்டணமின்றி கூடுதல்உதவிகளை வழங்க சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.

லிம்ரா நிறுவனம் ஆண்டுதோறும் நீட்தேர்வுக்கான மாதிரி வினாக்களை கட்டணம் எதுவுமின்றி வழங்கி வருகிறது.மேலும் புகழ்பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கி வருகிறது.

மாதிரித் தேர்வுகளை நடத்த, போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் கேரியர் பாய்ன்ட் நிறுவனத்துடன் லிம்ராஒப்பந்தம் மேற்கொண்டு, அத்தேர்வுகளைத் தமிழகமெங்கும் நடத்தும் உரிமை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 25, 31 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு 2 மாதிரித் தேர்வுகளை எழுதலாம்.ஒவ்வொரு தேர்வும் நீட் தேர்வு போலவே 3 மணி நேரம் ஆன்லைனில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல கேரியர் பாய்ன்ட் நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 72 சதவீதம் நீட் தேர்வில் இடம் பெற்றன. பெரும்பாலான கேரியர் பாய்ன்ட் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்ள கேரியர் பாய்ன்ட் ரூ.25 மட்டுமே வசூலிக்கிறது. ஆனால், லிம்ரா நிறுவனம் வழியாகச் சென்றால், தேர்வுக்கான பணத்தை லிம்ரா நிறுவனமே செலுத்தி விடுவதால், தமிழக லிம்ரா மாணவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இவற்றைப் பெறுவதற்கு 9952922333 / 9444615363 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Next Post

தமிழகத்தில் கியூசெட் நுழைவுத்தேர்வு அறிவிப்பு..

Thu Aug 19 , 2021
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் “கியூசெட்” நுழைவு தேர்வு தமிழக மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கியூசெட் என்ற மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு […]
CUCET-Entrance-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய