
ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வானது நடத்தப்பட உள்ளது.மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா மேலாண்மை இயக்குனர் வெ .இறையன்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து குடிமைப்ப பணி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற,அனைத்து தேர்வர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாதிரி ஆளுமைத் தேர்வானது நடத்தபட உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வர்கள் மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்பதன் மூலம்,அவர்கள் தங்கள் குறைபாடுகளை நீக்கிக் கொள்ள ஏதுவாகவும்,மேலும் எவ்வாறு விடையளிக்க வேண்டும் எனவும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும், ஆளுமைத் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களின் செயல்பாட்டை வீடியோவில் பதிவு செய்து,தேர்வு முடிந்ததுடன், தேர்வர்களுக்கு குறுந்தகடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க வரும் தேர்வர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்றும், மேலும் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட பல விவரங்களை அறிய www.civilservicecoaching.com என்ற இணையதளத்தை அணுகலாம்.தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தினை மின்னஞ்சல் மூலமாகவும்,தபால் மூலமாகவும் அனுப்பலாம்.தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி மகிழம்பூ, 163-1, பி.எஸ்.,குமாரசாமிராஜா சாலை (பசுமை வழிச் சாலை), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.