சபரிமலை ஐயப்பன் கோவிலில் 5000 பக்தர்கள் அனுமதி : டிச.20 முதல் !!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் டிச .20 ஆம் தேதி முதல் 5000 பக்தர்களை அனுமதிக்கலாம் என திருக்கோவிலின் தேவசம்போர்டு அறிவித்துள்ளது .கேரளா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பெறுவது வழக்கமாகும் .

இந்நிலையில் கொரோன பரவல் காரணமாக குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர் .ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் மண்டல -மகரவிளக்கு பூஜையை ஒட்டி நவம்பர் ,டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் பக்தர்களின் வருகையானது எண்ணிலடங்காதவை .

இந்தாண்டு கொரோன பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி 1000 பக்தர்களை அனுமதிக்கலாம் மற்றும் சனி ,ஞாயிறு ஆகிய தினங்களில் 2000 பக்தர்களை அனுமதிக்கலாம் என தேவசம்போர்டு முடிவு எடுத்தது.

சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வருகையை பல்வேறு இடங்களிலிருந்தும் அதிகரிக்க மேலும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திருக்கோவிலின் தேவசம்போர்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .இதை ஏற்றுக்கொண்ட தேவசம்போர்டு தினசரி 2000 பக்தர்களையும் ,சனி ,ஞாயிறு ஆகிய தினங்களில் 4000 பக்தர்களை அனுமதிக்கவேண்டும் என கேரள அரசிடம் பரிந்துரைத்து அதற்கு ஒப்புதலும் பெற்றது .டிச. 2 ஆம் தேதி முதல் ஆன்லைன்ல் பதிவு செய்யும் பக்தர்கள் தரிசனத்திற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தற்போது ,சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க 2000 இருந்து 5000 பக்தர்களை அனுமதிப்பது குறித்து தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளது .

Next Post

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலிப்பணியிடங்கள் : விண்ணப்பிக்க கடைசி தேதி 27-12-2020 !!

Fri Dec 18 , 2020
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுருவில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் ,இளநிலை சுருக்கெழுத்தாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . 01 .Junior Secretariat Assistant காலிப்பணியிடங்கள் : 17மாத சம்பளம் : ரூ 19,900 – 63200வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்தகுதி : […]
NAL-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய