
சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கொரோன தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி மூடப்பட்டது .வழிபாடு மற்றும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றபோது ,பக்தர்களுக்கான அனுமதியானது ரத்துசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
பொதுமுடக்கமானது தொடர்ந்து நீடிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 8 தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது .
படிப்படியாக ,கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து ,சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வருகிற நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி தேவசம்போர்டு ஆனது ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ,முக்கிய விதிகளையும் வகுத்துள்ளது .சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ,வார இறுதி நாட்களில் மேலும் 1000 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெறும் நாளில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது .
தற்போது தொடர்ந்து நீடிக்கப்பட்ட பொதுமுடக்கமானது நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .