ஜோசப் பிகானின் சாதனையை முறியடித்த ரொனால்டோ – கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்து புதிய சாதனை …

கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் 760 கோல்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் .இதற்கு முன்பு 759 கோல்கள் அடித்த ஜோசப் பிகானின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ .அதிகபட்சமாக 69 கோல்களை 2013 ஆம் ஆண்டு ரொனால்டோ அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள ஜுவென்டாஸ் அணியானது இத்தாலியன் சூப்பர் கோப்பையை 9 -வது முறையாக வென்றுள்ளது .இறுதிச்சுற்றில் நபோலி அணியை 2-௦ என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது .இதில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார் ,இதன்மூலம் சர்வதேச மற்றும் கிளப் ஆட்டங்களில் தனது 760வது கோலை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ.

இதுவரை ரொனால்டோ 1040 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் .இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல்களும்,மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 118 கோல்களும்அடித்துள்ளார் ,இது தவிர அவர் போர்ச்சுகல் அணிக்காக 102 கோல்களும்மற்றும் ஜுவென்டாஸ் அணிக்காக 85 கோல்களும்,ஸ்போர்ட்டிங் லிப்ஸன் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார் .

இதுதவிர ரொனால்டோவின் மற்றுமொரு சாதனையான,வருமான பட்டியலில் ,சுமார் 7544 கோடியை ஈட்டிய முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார்.இதுவரை டைகர் வுட்ஸ் ,பிளைட் மேவெதர் ஆகிய இரு விளையாட்டு வீரர்களுக்கு பிறகு சுமார் 1 பில்லியன் டாலர் வருமானத்தை பெற்ற மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரொனால்டோ …

Next Post

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி -11.02.2021

Fri Jan 22 , 2021
கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நிறுவனம் : கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் பணியிடம் : கடலூர் மொத்த காலியிடங்கள் : 14 காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் : Manager(Vet)-01 மாத சம்பளம் : ரூ .55,500 – 1,75,700 Deputy Manager(Qc)/(DC)-01 மாத சம்பளம் : ரூ .35,600 – […]
aavin-cuddalore-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய